பணம்(பிணம்) ஒரு நிமிடக்கதை

தன் ஒன்றுவிட்ட சகோதரனின் மரணத்தின் இறுதிநிகழ்வுக்காக கனடாவில்
இருந்து அவர் பாரீ்ஸ் வந்திருந்தார்.இப்போது பாரீஸில் உள்ள அந்த மண்டபத்தில் இறுதிநிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.கனடாவில்
இருந்து வந்திருந்த எனது நண்பரோ மண்டபத்தில் ஓரமாக நின்று விம்மி விம்மி
அழுதுகொண்டிருந்தார்.நான் அவரருகில் சென்று அவரது அழுகையை நிறுத்தும்

முயற்சியில் இறங்கியிருந்தேன். ஆனால் அவரோ தொடர்ந்தும் மூர்க்கமாக
அழுதுகொண்டிருந்தார்.தன் ஒன்றுவிட்ட சகோதரன்மீது அளவுகடந்த பாசம்
வைத்து இருக்கும்,என் நண்பனைநினைத்து என்மனம் ஆனந்தம் கொண்டது.
அந்த ஆனந்தம் சிலநொடிகளில் தவிடுபொடியாய் உடைந்து போனது.
உன்சகோதரன்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கின்றாயே! என்று நான் சொல்லி…முடிப்பதற்குள் நண்பன் தொடர்ந்தான்- பாசமாவது வேசமாவது
இவன் வெளிநாடு வருவதற்கு(இறந்தவரைக்காட்டி)கனடாவில் இருந்து
5000 டொலர்களை வட்டிக்கு வாங்கிக் கொடுத்தேன் இரண்டு வருடங்களாக
வட்டிகட்டி வருகிறேன். இவன் இங்குவந்து(பாரீஸ்)சேர்ந்ததும் சந்தோசப் படடேன் ஆனால் என் சந்தோசம் நிலைக்கவில்லை இவன் நோய்வாய்ப்பட்டு
இறந்து போனான் என்பதைவிட இவனுக்காய் நான்பட்ட கடன் 5000 த்தையும்
எப்போ திருப்பி அடைக்கப்போறேன். என்று நினைக்கும் போது நெஞ்சு
அடைக்கிறது. என்று அவர் சொல்லிமுடிக்கமுன்னர் என் மனம் ஓவென்று
அழுதது.  ஒரு மனிதனின் இறுதி அத்தியாயம் மரணமாய் இருக்கையில்
இறந்த ஒருவரின் தரம்- தராதரத்தை பணம்தான் புலம்பெயர்ந்த மண்ணிலும்
நிர்ணயம் செய்கிறது. என்று நினைக்கும்போது !மண்டபத்தைவிட்டு வெளியே வந்த
நான் தனிமையில் நின்று வானத்தை வெறித்துப் பார்த்தேன். உறவுகள் ஒவொன்றாய் மனதில் நிழலாட வானம் மட்டும் எந்தவித சலனமுமின்றி
அப்படியே இருந்தது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux