தீவகம் வேலணை வைத்தியசாலையின் மருத்துவருக்கு நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை வைத்தியசாலையின் மருத்துவருக்கு நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

IMG_0056 copy

தீவகம் வேலணை பிரதேச மருத்துவமனையின் மருத்துவர் R.S,வீரசிங்கா அவர்கள் மாற்றலாகிச் செல்வதனையிட்டு-அவருக்கு சிறியளவில்  பிரியாவிடை நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச மருத்துவமனையில் கடந்த 23 மாதங்களாக  மருத்துவர் R.S,வீரசிங்கா அவர்கள் சிறப்பாக மருத்துவ சேவையாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தற்பாேது மேற்படிப்புக்காக கொழும்புக்கு மாற்றலாகி செல்லும்,இவரது சேவையைப் பாராட்டியே  இப்பாராட்டு நிகழ்வு கடந்த 09/02/2016 அன்று நடத்தப்பட்டதாக தெரிய வருகின்றது.

களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட- மருத்துவர் R.S,வீரசிங்கா அவர்கள் இலங்கையின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவராவார்.இவரது தந்தையார் ஓய்வு நிலை பாடசாலை அதிபர் ஆவார்.
மருத்துவர் திரு,R.S,வீரசிங்கா அவர்கள் வேலணை பிரதேச மக்களின் நன்மதிப்பை பெற்றவா் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவருக்கான பாராட்டுவிழா  நிகழ்வினை- வேலணை பிரதேச மருத்துவமனையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தினரும்,நோயாளர்  நலன்புரிச் சங்கத்தினரும் இணைந்தே ஒழுங்கு செய்து நடத்தியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.IMG_0075 copy (1)

IMG_0059 copy (1) IMG_0062 copy (1) IMG_0063 copy (2) IMG_0065 copy IMG_0066 copy IMG_0073 copy IMG_0078 copy IMG_0079 copy (1) IMG_0081 copy IMG_0082 copy (1) IMG_0083 copy (1) IMG_0089 copy IMG_0085 copy IMG_0087 copy (1) IMG_0095 copy IMG_0097 copy IMG_0098 copy IMG_0098 copy IMG_0100 copy (1) IMG_0102 copy (2)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux