தீவகக்கிராமங்களான மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை-புளியங்கூடல்-புங்குடுதீவு ஆகிய கிராமங்களில்-இம்முறை நெல் அறுவடையினை,பெரும்பாலான விவசாயிகள் இயந்திரத்தின் மூலமே மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவகத்தில் ஏற்பட்டுள்ள தொழிலாளர்களின் பற்றாக்குறையினை-இயந்திரம் தீர்த்து வைத்துள்ளதாகவும்-ஒரு சில மணித்தியாலங்களில் தமது வயல் முழுவதையும் அறுவடை செய்ய முடிந்ததாகவும்-விவசாயி ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.
இயந்திரத்தின் மூலமே தொடர்ந்தும் விவசாயிகள் நெல் அறுவடையினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.