யாழ் தீவகம் வேலணையைச் சேர்ந்த,கல்வியியலாளர் திரு.பொ.அருணகிரிநாதன் அவர்களின் மணிவிழா நிகழ்வு 31.01.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் நல்லூரில் அமைந்துள்ள துர்க்கா மணிமண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நீண்டகாலம் ஆசிரியராகவும், தீவக கல்வி வலயத்தில் அமைந்துள்ள புகழ்மிக்க வேலணை மத்திய கல்லூரியின் அதிபராகவும், தற்போது யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றும் திரு.பொ.அருணகிரிநாதன் அவர்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக முப்பது வருடங்கள் பணியாற்றி தற்போது சிரேஸ்ட துணைப் பொதுச் செயலாளராகவும் பதவிவகித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்தினால்- நல்லூரில் நடைபெற்ற-மணிவிழா நிகழ்வுகள் முழுமையாக நிழற்படப் பதிவு செய்யப்பட்டதுடன்-மேலும் அல்லையூர் இணையத்தினால்-வாழ்த்துப்பா மடலும் வழங்கப்பட்டது.