தீவகம் புளியங்கூடலில் – இராஐ மகா மாரியம்மன் ஆலயத்துக்குச் சொந்தமான வயலில் சமய சாரப்படி நெல் அறுவடை (புதிர் எடுக்கும்)விழா தைப்பூச நன்நாளில் பக்திபூர்வமாக நடைபெற்றது.
வயலில் அறுவடை செய்த புதிய நெல் ஊர்வலமாக மேளதாளங்களுடன் இராஐ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டு படையலிடப்பட்டது.
அன்றையதினம் இராஐ மகா மாரியம்மன் எழுந்தருள்வதற்கு வேண்டிய புதிய மஞ்சத்திற்கு அடிக்கால் (நாளுக்கு) நாட்டிஆரம்பிக்கப்பட்டது.
விவசாயிகளினால் தொன்று தொட்டுபோற்றப்பட்டு வரும் புதிர் எடுத்தல் என்னும் பாரம்பரியம்-இம்முறை தீவகத்தில் சிறப்பாக நடைபெற்றது பெருமகிழ்ச்சி தருவதாக விவசாயிகள் பலர் எமது இணையத்திற்கு தெரிவித்தனர்.