கல்வியியலாளர் திரு.பொ.அருணகிரிநாதன் அவர்கள்- நல்லூர் சயன்ஸ் அக்கடமி சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்.
ஆசிரியராக, அதிபராக, தற்போது யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சிரேஸ்ட துணைப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றும் திரு.பொ.அருணகிரிநாதன் அவர்களின் 35ஆண்டுகால கல்விச் சேவையைப் பாராட்டி நல்லூர் சயன்ஸ் அக்கடமி சமூகத்தினர் கடந்த 17.01.2016 அன்று அக்கடமி வளாகத்தில் பல நூற்றுக் கணக்கான பெற்றோர்கள், ஆயிரக்கணக்கான மாணவர்கள், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் விழா எடுத்து கௌரவித்தனர்.
கல்வியியலாளர் திரு.பொ.அருணகிரிநாதன் அவர்கள் 30.01.2016 இல் தனது அறுபதாவது வயதில் ஓய்வுபெறவுள்ள நிலையில்-இவரது சேவையைப் பாராட்டி இந்த கௌரவிப்பு வைபவம் இடம்பெற்றது.
நீண்டகாலம் ஆசிரியராகவும், தீவக கல்வி வலயத்தில் அமைந்துள்ள புகழ்மிக்க வேலணை மத்திய கல்லூரியின் அதிபராகவும், தற்போது யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றும் திரு.பொ.அருணகிரிநாதன் அவர்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக முப்பது வருடங்கள் பணியாற்றி தற்போது சிரேஸ்ட துணைப் பொதுச் செயலாளராகவும் பதவிவகித்து வருகின்றார்.
இவரது கௌரவிப்பு நிகழ்வில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு கௌரவிப்பினை வழங்கினர்.
இவரது மணிவிழா நிகழ்வு வரும் 31.01.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.