எமது கிராமத்திற்கு  பெருமை சேர்த்த,செல்வன் தனபாலசிங்கம் ஜனகன் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்-படங்கள் இணைப்பு!

எமது கிராமத்திற்கு பெருமை சேர்த்த,செல்வன் தனபாலசிங்கம் ஜனகன் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்-படங்கள் இணைப்பு!

12400794_961362277283847_4647882254959645517_n

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31வது  பட்டமளிப்பு விழாவில் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வன் தனபாலசிங்கம் ஜனகன் அவர்கள்-விஞ்ஞானமானி பட்டத்தினை பெற்றுக் கொண்டார்-எமது கிராமத்திற்கு பெருமை சேர்த்த-செல்வன் த.ஜனகன் அவர்களை-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

செல்வன் த.ஜனகன் அவர்கள்-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டின் பேரில்-வேலணை மத்திய கல்லூயின் பழைய மாணவர் சங்க பிரான்ஸ் கிளையின் நிதி அனுசரணையில் -முழுநேர கணிதபாட ஆசிரியராகவும்-வேலணை மத்திய கல்லூரி மாணவர் தங்கு விடுதியின் பணிப்பாளராகவும்-சிறப்பாக பணியாற்றி வருகின்றார்-என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றதுடன்- பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வைத்தார்.

முதல் அமர்வு முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் 170 மாணவர்களுக்கும் 2 ஆவது அமர்வில் 193 மாணவர்களுக்கும். 3 ஆவது அமர்பில் 196 மாணவர்களுக்கும் 4 ஆவது அமர்வில் 201 மாணவர்களுக்கான பட்டங்களும் வழங்கப்பட்டன.

இப்பட்டமளிப்பு விழாவில் சுமார் 1939 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

image-7be832d499973a0666884a4e0268c7929abd9b27fe69a49c700873ec56548f48-V image-98249aff4c5e9f5983331e62776786bf043883547ef26baea254899b8146a8b2-V image-21fd056723d7a0c6e6c991e5ce033f12c77986aa42b3056457cca78bf3f2331e-V image-a75bd900c63bc36260515eece86a0971b74c3f6eca81fde1433819925da91550-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux