வன்னியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் இல்லத்து மாணவர்களுக்காக-அல்லையூர் இணையம் நான்காவது தடவையாக நடத்திய தைப்பொங்கல் விழா கடந்த 15.01.2016 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடத்தப்பட்டது ஏற்கனவே அறிந்த செய்தியாகும்.
அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் அன்று நடைபெற்ற,பொங்கல் விழாவின் போது-இலங்கையில் புகழ் பெற்ற-சக்தி FM வானொலி நிலையத்தினரும் -இம்மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினர்.
இந்நிகழ்சிகள் அனைத்தும் அகில இலங்கை முழுவதும் நேரடி அஞ்சல் செய்யப்பட்டன.
அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் பொங்கல் விழா நடைபெறுவதாகவும்-நான்காவது தடவையாக இப்பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்படுவதாகவும்-சக்தி FM வானொலி மூலம் அறிவிக்கப்பட்டதனை யாழில் ஒருவர் செவிமடுத்ததாக எமது இணையத்திற்கு தெரிவித்தார்.