தைப்பொங்கல் தினத்தன்று மாலை வேளை -தீவக பிரதான வீதியில், அராலிச்சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற-வீதி விபத்தொன்றில் காரைச் செலுத்தி வந்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தீவகத்திலிருந்து,யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மாருதிக் காரே வீதியை விட்டுப் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக மேலும் தெரிய வருகின்றது.
மாருதிக்காரை ஓட்டி வந்தவர் கண்ணயர்ந்து தூங்கியதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்வையிட்ட ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.
உயிர் தப்பியவர் கைத்தொலைபேசி ஊடாக கடவுளுக்கும்-உறவினர்களுக்கும் நன்றி சொல்வதனை கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.