
வேலணை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்க அங்குராப்பண கூட்டம் கடந்த 09-01-2016 சனிக்கிழமை மாலை 4.00மணிக்கு வேலணை பிரதேச மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு மண்டபத்தில் மருத்துவமனையின் மருத்துவர் திரு ஜெ.தணேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் -பொதுமக்கள் மற்றும் முன்னர் இயங்கி பின் செயற்படாமல் இருந்த வேலணை பிரதேச மருத்துவமனையின்அபிவிருத்தி சங்க நிர்வாகத்தினர் மற்றும் மருத்துவமனையின் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நோயாளர் நலன்புரி சங்கத்திற்கு புதிதாக நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. இப்புதிய நிர்வாகத்தின் தலைவராக (பதவிவழி) வேலணை பிரதேச மருத்துவ மனையின் பொறுப்பதிகாரி மருத்துவர் தெரிவானார். உப தலைவராக திரு ஆ.கனகசபை அவர்களும்- செயலாளராக திரு கை.மகேந்திரலிங்கம் அவர்களும்- உப.செயலாளராக திரு.க.மார்க்கண்டுதாசன் அவர்களும் தெரிவானார்கள்.
பொருளாளராக திரு. நு.ஜெகநாதன் அவர்கள் தெரிவானார்.
மேலும் நிர்வாக உறுப்பினர்களாக திரு. இந்.சிவநாதன் -திரு.மா.குணசிங்கம் -திரு.கே.மணிராஜ் – திரு.வை.கருணகரன் – திரு.சு.அகிலன் – திரு.சி.சிவகடாச்சம் – திரு.இ.சற்குருநாதன்-திருமதி அன்ரனி மாலதி ஆகியோர் தெரிவானர்கள்.
கணக்காய்வாளராக மருத்துவமனையின் பணியாளர் திரு. கு.தருமு அவர்கள் தெரிவானார்.
முன்னர் இயங்கி செயலிழந்திருந்த வேலணை பிரதேச மருத்துவ மனையின்அபிவிருத்தி சங்கம் என்ற பெயரே தற்போது வேலணை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரி சங்கம் என்று மாற்றப்பட்டு தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையின் செயற்பாட்டுக்கு புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் வேலணை மக்களின் உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றது. உங்களின் உதவியால் இவ்வூர்மக்கள் (நோயாளர்) பயன்பெறுவார்கள் என நம்புகின்றோம்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”