வேலணை தொழில் அதிபரின் திடீர் மரணத்தினால் கிடப்பில் போடப்பட்ட திட்டம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

வேலணை தொழில் அதிபரின் திடீர் மரணத்தினால் கிடப்பில் போடப்பட்ட திட்டம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

10985008_844557505618513_7972368351882577407_oவேலணையைச் சேர்ந்த,பிரபல தொழில் அதிபர் சிவசரணம் குகநாதன் அவர்கள் கடந்த வருடம் திடீர் என நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்ததனால்,அவரினால் தீவக மக்களின் நலன் கருதி அல்லைப்பிட்டியில் ஆரம்பிக்கப்படவிருந்த,தொழிற்சாலைத் திட்டம் ஒன்று கிடப்பில் போடப்பட்டுள்ளதாக-அன்னாரின் நெருங்கிய உறவினர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தால்-தீவகத்தைச் சேர்ந்த,பல இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்றிருப்பர் என அவர் மேலும் தெரிவித்தார்.

அமரர் சிவசரணம் குகநாதன் அவர்களினால்,யாழ்-தீவக பிரதான வீதியில் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அலுமினியம் தொழிற்சாலையின் வெற்றுக்காணியே விலைகொடுத்து வாங்கப்பட்டிருந்ததாகவும்-நீண்ட காலமாக மக்கள் நடமாட்டமின்றி புதர்மண்டிக்கிடந்த நிலத்தினை-முதற்கட்டமாக துப்பரவு செய்திருந்த நிலையிலேயே-குகநாதன் அவர்கள் திடீர் மரணமடைந்தார் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

தொழில் அதிபர் சிவசரணம் குகநாதன் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து இத்திட்டம் காலவரையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவரான,அமரர்  சிவசரணம் குகநாதன் அவர்கள்-வேலணை மத்திய கல்லூரிக்கும்-வேலணை  மக்களுக்கும் பல உதவிகளை முன்னின்று செய்து வந்தார் என்றும் வேலணை மக்கள் நன்றியோடு தெரிவிக்கின்றனர்.

IMG_4389 copy IMG_4386 copy IMG_4385 copy IMG_4384 copy IMG_4399 copy IMG_4391 copy IMG_4400 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux