அல்லைப்பிட்டியில் கல்விகற்கும் மாணவர்களுக்கு-வர்த்தகர் திரு மகிந்தன் அவர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.கடந்த பல வருடங்களாக-வர்த்தகர் மகிந்தன் அவர்கள்-அல்லைப்பிட்டி மாணவர்களுக்கு உதவிடும் நோக்கோடு மாணவர்களுக்குத் தேவையான கொப்பிகள்-புத்தகப்பைகள்-பென்சில்கள் போன்ற முக்கியமானவற்றை வழங்கி வருவதாக மேலும் தெரிய வருகின்றது.
இந்நிகழ்வு சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலத்தில் நடைபெற்றது.வித்தியாலய அதிபர் என்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற-நிகழ்வில் பங்குத்தந்தை எம்.பத்திநாதர் அவர்களும்-வர்த்தகர் மகிந்தன் அவர்களும்-உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.