யாழ் தீவகத்தில் பெய்து வரும் கன மழையினால்-வறிய மக்கள் பெரும் துன்பத்திற்குள் தள்ளப்பட்டிருப்பதாக,அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த அடைமழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சில தினங்களாக-கன மழை பெய்து வருவதனால்-தாழ்வு நிலப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகவும்-மழை தொடரும் பட்சத்தில்-இம்மக்கள் பாதுகாப்பான இடம் தேடி நகர வேண்டிய நிலை வரலாம் என்று தீவக மக்களில் சிலர் எமது இணையத்திற்கு தெரிவித்தனர்.
இதுவரை அரசியல் வாதிகளோ அல்லது அரச அதிகாரிகளோ- இப்பகுதிகளில் தலை காட்டவில்லை என்று மக்கள் கவலையோடு கூறுகின்றனர்.
இன்றைய (29.12.2015 )தினம் -தீவகப் பகுதிகளில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-மழை வெள்ளக் காட்சிகளை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.