நத்தார் பெருநாளை முன்னிட்டு-25.12.2015 வெள்ளிக்கிழமை அன்று,அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-“பிரான்ஸ் மகிமையின் சுவிசேஷ எழுப்புதல் திருச்சபையின்”நிதி அனுசரணையில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள பக்கவாத பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ள நமது உறவுகளின் மனம்மகிழ்வித்திட அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கியதுடன் மேலும் மதிய சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.
அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு I. சிவநாதன் அவர்கள் நேரடியாகச் சென்று இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
அல்லையூர் இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நிதி வழங்கிய-GLORIOUS EVANGELICAL REVIVAL CHURCH திருச்சபைக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
EGLISE EVANGELIQUE D’ORLY
7&9 AV .des Martyrs de Chàteaubriant