யாழ் தீவகத்தில் படையினரின் மோட்டார் சைக்கிள் மோதியதில்- 8 வயதான பாடசாலை மாணவி ஒருவரின் கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
கடந்த 14/12/2015 அன்று காலை 10 மணியளவில் இராணுவத்தினர் தமது மோட்டார் சைக்கிளில் காவலரண்களுக்கு காலை உணவு கொண்டு சென்றவேளை -ஊர்காவற்றுறை தம்பாட்டி பிரதேசத்தில் வசிக்கும் தவராசா மதுசா (வயது -8) என்ற மாணவியின் மேல் மோதுண்டதனால்- அவரது ஒரு கால் முறிந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்விபத்தில் காலில் காயமடைந்த சிறுமியை, உடனடியாக ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் – படையினரின் வாகனம் மாேதியதில் வேலணையில் கல்வி கற்கும் நாரந்தனையைச் சேர்ந்த, 16 வயதுடைய மாணவி பலியானார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.