தீவகம் குறிகட்டுவானிலிருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றாள் குமுதினி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் குறிகட்டுவானிலிருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றாள் குமுதினி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

sss (11)

“குமுதினி” இப்பெயர்  தீவக மக்களால் மட்டுமல்ல-ஈழத்தமிழ் மக்கள் அனைவராலும் என்றுமே மறக்க முடியாத ஒரு  பெயராகும் . இன்றும் கூட இப்பெயரை உச்சரிக்கும்  மனங்கள் துக்கத்தால் கலங்கி நிற்கின்றன.

நெடுந்தீவு மக்களின் கடல் பயணத்திற்கு நீண்டகாலமாக துணைபுரிந்து  வந்த குமுதினி- தனது தள்ளாடும் வயது வந்தும்  கூட  ஓய்வு எடுக்க விரும்பாமல் கடலில் மகிழ்ச்சியோடு பயணித்துக் கொண்டிருந்தாள்.

வயோதிபம் காரணமாக -திடீர் திடீரென பழுதடைந்து கடலில் நங்கூரம் இடப்படுவதும்-பின்னர் பழுது திருத்தப்பட்டு கடலில் பயணிப்பதுவும் தொடர்கதையாகவுள்ளதாக  அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன..

இது விடயத்தில் அதிகாரிகள் உடனடியாக  தலையிட்டு-குமுதினி மகிழ்ச்சியோடு பழுதின்றி கடல்மீது பயணிக்க வழிசெய்ய முன் வரவேண்டும் என்று நெடுந்தீவு மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனராம்-  

அண்மையில் பழுதடைந்து குறிகட்டுவான் துறைமுகத்தில் நீண்ட நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த,குமுதினி பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லையூர் இணையத்தினால்-அண்மையில் பதிவுசெய்யப்பட்ட குறிகட்டுவான் துறைமுகத்தின் அழகிய  காட்சிகளை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

sss (13) sss (10) sss (15) sss (9) sss (17) sss (16) sss (19) sss (18)1 2190

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux