கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோவில்களிலும் வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.
இத்தீபத் திருவிழா இவ்வருடமும் வழமை போல தீவகத்தில் அமைந்துள்ள அனைத்து ஆலயங்களில், சிறப்பாக இடம்பெற்றதுடன்-இல்லங்களிலும் பொது இடங்களிலும் தீபஒளியேற்றி வழிபட்டனர் என்று தீவகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர்-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன்-வேலணை சிற்பனை முருகன்-ஊரைதீவு சிவன்-எழுவைதீவு முருகன் ஆகிய ஆலயங்களில் இடம்பெற்ற-கார்த்திகைத் திருவிழாவின் எமக்கு கிடைக்கப்பெற்ற நிழற்படங்களுடன்-மேலும் வேலணைப் பகுதியில் எம்மால் பதிவு செய்யப்பட்ட விளக்கீட்டின் நிழற்படங்களும் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளன.