கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ்.நகர் நோக்கி சென்ற காரை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் படுகாயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலும், மற்றுமொருவர் காயங்களுடனும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
யாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் இன்று சனிக்கிழமை மதியம் 1. 00 மணியளவில் புகைவண்டியுடன் கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த புகைவண்டி வருவதை பொருட்படுத்தாமல் கச்சேரி-நல்லூர் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற புகைவண்டி கடவையை மேற்படி இளைஞர்கள் காரில் கடக்க முற்பட்ட போதே இந்தப் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பொறியியலாளரான எஸ்.சுதாகரன் (வயது41) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஆதவன் (வயது28), அரவிந்தன் (வயது28), கம்பதாஸன் (வயது23) என்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.