யாழ் தீவகம் உட்பட வடக்கில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மாரிமழையினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
தீவகத்தில் மழை விடாது தொடர்ச்சியாக பெய்து கொண்டிருப்பதனால் பாடசாலை செல்லும் மாணவர்களும் மற்றும் அன்றாட பணிகளுக்கு வெளியிடங்களுக்குச் செல்பவர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
இந்த வருடம் பல சிரமங்களுக்கு மத்தியில் நெல்பயிரிட்ட விவசாயிகள் பலரும் பெரும் கவலையில் மூழ்கியுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.