யாழில் பூரண கதவடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யாழ். நகர் பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதற்கு ஆதரவு வழக்கும் முகமாக யாழில் பூரண கதவடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
போராட்டத்தின் போது வீதிகளில் ரயர் கொளுத்துபவர்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களை கைது செய்து கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கைளில் ஈடுபட்டு உள்ளனர்.