மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் நினைவாக-பக்கவாத இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் நினைவாக-பக்கவாத இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

2 (2)

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை (10.11.2015 செவ்வாய்க்கிழமை)முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அன்னாரது குடும்பத்தினரின் நிதியுதவியுடன்-முதற்தடவையாக,கிளிநொச்சிச்சியில் அமைந்துள்ள   பக்கவாத பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களுக்கு விஷேட மதிய உணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் அவர்களின் தேவைகளுக்கென மேலதிக நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்கும்பான் சிவகாமி அம்மனை அன்னாரது குடும்பத்தினருடன் சேர்ந்து நாமும் வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

பக்கவாத பராமரிப்பு இல்லம்-கிளிநொச்சி

கிளிநொச்சியில் அமைந்துள்ள பக்கவாத பராமரிப்பு இல்லம்  என்பது பாேரினால் பாதிக்கப்பபட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் நிலையமாகும் அதாவது  பாேரிின் வடுக்களைச்  சுமந்துள்ளவர்களே கூடுதலாக இங்குள்ளனர்  என்பதே முக்கிய விடையமாகும். 

இங்கு  குடும்பத்தினரால்  கைவிடப்பட்ட கடும்  பாதிப்புற்ற பெண்கள்  (மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் )முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட  பெண்கள், மற்றும் ஆண்களால் ஏமாற்றப்பட்டு குழந்தை பிறந்தபின்னர்  கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ,எனப் பலர் உள்ளனர்,
திருமணத்தின் பின்னர் கணவன்மார்களால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் தமது குழந்தைகளுடன் பாதுகாப்பாக(மனநலம்பாதிக்கப்பட்டவர்கள்) தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர்,(இவா்களில் அதிகமானவர்களைை பிரதேச செயலகத்தின் சமூக சேவைப்பகுதியினரும்,   யாழ்   கிளிநொச்சி   மாவட்டசெயலகத்தினரும்அனுப்பி வைத்துள்ளனர்,),
இவர்களில் அதிகமானோர்   கிளிநொச்சி மாவட்டமருத்துவ மனையில் உளவள சிகிச்சை பெற்றுவருகின்றனர் (கிழமையில் ஒருநாள்)  இவ்விடையமுற்பட போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்படுவதாக இங்கு பணியாற்றுவோர் கூறி கவலைப்பட்டனர், இங்கு சுமார் 12 தாெடக்கம் 15 வரையானாேர் தங்கியுள்ளனர்
     
மேலும் இங்கு தங்கியுள்ள 17வயது பெண் பிள்ளை ஒருவர் (விசேட தேவையுடையாேர் கல்வி) கற்கும் இடத்திற்கு சென்று வருவதற்கு  போக்குவரத்து வசதியின்றி போகமுடியாத நிலையில் உள்ளதாக  கவலையுடன்கூறினார்கள், இவ்வில்லம் கவனிக்கப்பபடவேண்டிய இல்லமாகவுள்ளது என்பதே நிதர்சனம், கருணையுள்ளங்களிடமிருந்து ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றது இவ் பக்கவாத பராமரிப்பு இல்லம்.
 
பக்கவாத பராமரிப்பு இல்லம்                  
இல=58.1ம்  ஒழுங்கை இரத்தினபுரம்  
கிளிநாெச்சி    
 
(PARALYSES   NURSING   HOME )
(NO 58   1stLANE   ERATHIIINAPURAM 
 KILINOCHCHI    
இது கார்த்திகை மாதத்தில்- அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற-3வது அறப்பணி நிகழ்வாகும்.

final 2 (3) 2 (5) 2 (6) 2 (7) 2 (8) 2 (9) 2 (10) 2 (11) 2 (12) 2 (13) 2 (14)Sans titre2 (4)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux