தீவகம் நயினாதீவில் -நாகபூசணி அம்மன் பக்தர் ஒருவரின் இல்லத்திற்குள் இன்று புகுந்த நாகபாம்பு ஒன்று அழகாக படமெடுத்தாடியதாக தெரிய வருகின்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் ஆலயத்தின் அருகாமையில் நாகபாம்புகளின் நடமாட்டம் காணப்படுகின்ற போதிலும்-அவை பக்தர்களுக்கு எதுவித தீங்கும் விளைவிப்பதில்லை என்று ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே போல் ஊருக்குள் வரும் நாகபாம்பினை பயபக்தியோடு பிடித்து ஊர் எல்லைக்கப்பால் கொண்டு சென்று விட்டுவிடுவதாக மேலும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
படங்கள்-விபரங்கள்….
நயினை எம்.குமரன்