தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்களின் இலட்சக்கணக்கான விருப்பு வாக்குகளைப் பெற்றவருமாகிய,திரு சிவஞானம் சிறிதரன் அவர்கள்-வெற்றி பெற்ற பின்னர் முதற் தடவையாக இன்று திங்கட்கிழமை காலை மண்டைதீவுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
அவரை வரவேற்ற மண்டைதீவு மக்கள்-அவரை பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அழைத்து வந்து – பொன்னாடை போர்த்திக் கைளரவித்ததுடன் மேலும் அவருக்காக விஷேட பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.
மண்டைதீவு மக்களினால்,பாராளுமன்ற உறுப்பினரிடம் சில கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமாக மண்டைதீவு கண்ணகை அம்மன் வீதி மற்றும் மண்டைதீவு-அல்லைப்பிட்டி பரவைக்கடல் ஊடான இணைப்பு வீதி,ஆகியவற்றினை புனரமைத்துத் தர ஆவண செய்யுமாறு கோரப்பட்டிருந்ததாக மேலும் தெரிய வருகின்றது.
அல்லையூர் இணையத்திற்காக…
மண்டைதீவிலிருந்து M.கஜன்