இம்முறை தீவகத்தின் அனைத்துப்பகுதிகளிலிலும்,நெல் பயிரிடுவதில் விவசாயிகள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மண்டைதீவு முதல் அனலைதீவு வரையான தீவகத்தின் அனைத்துக் கிராமங்களிலிலும், பருவகால நெற்செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும்-இவர்களுக்கு மானிய விலையில் விதை நெற்கள் மற்றும் உரவகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிய வருகின்றது.
கடந்த வருடம் அல்லைப்பிட்டி-மண்கும்பான் பகுதிகளில் விவசாயிகள் எவரும் நெற்செய்கையில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
விவசாயிகளால் மேற்கு மண்கும்பானில் அமைந்துள்ள வயல் நிலங்கள் உழுவதனை தாம் நேரில் கண்ணுற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.