அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உடற்பயிற்சிப் போட்டியில் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சம்பியனானது.
அகில இலங்கை பாடசாலைகள் மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் கடந்த எட்டு வருடங்களாக இப் பாடசாலை முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளமை விசேட அம்சமாகும்.
2008இலும் 2011இலும் இவ் வருடமும் தங்கப் பதக்கத்தை சுவீகரித்த ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மற்றைய மூன்று வருடங்களில் வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளது.
இவ் வருட உடற்கலைப் பயிற்சிப் போட்டிகளில் மற்றொரு யாழ். மாவட்டப் பாடசாலையான இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டது