யாழ்ப்பாணத்தில் கள் அடிப்போர் குறைவடைந்து பியர் குடிப்போரின் தொகை அதிகரிப்பு-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்தில் கள் அடிப்போர் குறைவடைந்து பியர் குடிப்போரின் தொகை அதிகரிப்பு-விபரங்கள் இணைப்பு!

யாழ்.மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் கள்ளுத்தவறணைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. ஆயினும் மதுபான சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே போன்று, பியர் – வெளிநாட்டு மதுபானம் என்பவற்றின் நுகர்வும் கடந்த 7 ஆண்டுகளில் 20 மடங்காக அதிகரித்துள்ளது. Mannar-Toddy-Sapper

யாழ்.மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டு 52 மதுபான சாலைகள் இயங்கியதுடன், 2012 ஆம் ஆண்டு 77 மதுபானசாலைகளாக அது அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது 75 ஆகக் குறை வடைந்துள்ளது. கள்ளுத் தவறணைகளின் எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டு 153 ஆக காணப்பட்ட துடன் 2014 ஆம் ஆண்டு 149 ஆகக் குறைவடைந்துள்ளது.

மதுபான நுகர்வுகளும், கடந்த 7 ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 25 லீற்றர் பியர் நுகரப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு 48 லட்சத்து 45 ஆயிரத்து 588 லீற்றராக பியர் நுகர்வு அதிகரித்து, 2014 ஆம் ஆண்டு 20 லட்சத்து 60 ஆயிரத்து 714 ஆகக் குறைவடைந்துள்ளது. 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 மடங்கு நுகர்வு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.Kallu-thavaranai

வெளிநாட்டு மதுபானங்கள் 2008 ஆம் ஆண்டு ஆயிரத்து 60 லீற்றரும், 2011 ஆம் ஆண்டு 73 ஆயிரத்து 702 லீற்றரும் நுகரப்பட்டுள்ளது. இது 2014 ஆம் ஆண்டு 28 ஆயிரத்து 285 ஆகக் குறைவடைந்துள்ளது. இருப்பினும் 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26 மடங்கினால் நுகர்வு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

சாராயம் 2008 ஆம் ஆண்டு 2 லட்சத்து 61 ஆயிரத்து 457 லீற்றர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2012 ஆம் ஆண்டு 21 லட்சத்து 26 ஆயிரத்து 306 லீற்றராக அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 10 லட்சத்து 77 ஆயிரத்து 458 லீற்றராக சாராய விற்பனை குறைவடைந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும் போது 2014 ஆம் ஆண்டு 4 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

கள்ளு விற்பனை 2008 ஆம் ஆண்டு 14 லட்சத்து 39 ஆயிரத்து 981 லீற்றராகக் காணப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு 64 லட்சத்து 14 ஆயிரத்து 48 லீற்றராக உச்ச அளவில் அதிகரித்தது. 2014 ஆம் ஆண்டு 46 லட்சத்து 41 ஆயிரத்து 362 லீற்றராக குறைவடைந்துள்ளது. 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பி டுகை யில் 2014 ஆம் ஆண்டு 3 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

உள்ளூர் உற்பத்தி மதுபானம், 2008 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 75 ஆயி ரத்து 134 லீற்றராக இருந்ததுடன், 2014 ஆம் ஆண்டு 53 ஆயிரத்து 590 லீற்றராக குறைவடைந்துள்ளது. 405171_bochonok_stakany_bokaly_pivo_svetloe_tyomnoe_xmel__1680x1050_(www.GdeFon.ru)     

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux