அல்லையூர் இணையம்,வன்னியிலும்,யாழிலும், ஒரே நேரத்தில் நடத்திய இரு சிறப்புணவு வழங்கும் நிகழ்வுகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம்,வன்னியிலும்,யாழிலும், ஒரே நேரத்தில் நடத்திய இரு சிறப்புணவு வழங்கும் நிகழ்வுகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

ss (2)

அறப்பணி ஒன்றையே தனது முதற்பணியாகக் கொண்டு இயங்கி வரும்-அல்லையூர் இணையமானது,ஜப்பசி மாதத்திற்கான சிறப்புணவு வழங்கும் நிகழ்வினை 03.10.2015 சனிக்கிழமை அன்று-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலும்-யாழ் சுன்னாகத்தில் இயங்கும் வாழ்வகம்  விழிப்புலன் இழந்த  சிறுவர் இல்லத்திலுமென ஒரே நேரத்தில் இரு நிகழ்வுகளாக நடத்தியது.

இவ்விரு இல்லச்சிறுவர்களுக்கும் சிறப்புணவு வழங்கியதற்கு வேண்டிய நிதியினை-பிரான்ஸ் villeneuve le roi இல் வசிக்கும்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த,திரு-திருமதி சொர்ணலிங்கம் (ரவி)தம்பதிகளின் செல்வப்புதல்வன் julien யூலியன் அவர்களின் 10வது பிறந்த நாளினை(03.10.2015)முன்னிட்டு-அல்லையூர் இணையத்திடம்    60 ஆயிரம் ரூபாக்களை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வுக்கு-அல்லையூர் இணையத்தின் சார்பில்-பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களுடன் மேலும் எமது நிழற்படப்பதிவாளரும்,அறப்பணியாளருமாகிய,திரு இ.சிவநாதன் அவர்களும் கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று சிறப்புணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேபோல் எமது செய்தியாளரும்,அறப்பணியாளருமாகிய,திரு வி.குருபவராசா அவர்கள் சுன்னாகம் வாழ்வகத்தில் நடத்தப்பட்ட சிறப்புணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

ஆதரவற்ற இச்சிறுவர்களுக்கு வயிறாற அன்னமிட்டு மகிழ்ந்த,திரு-திருமதி சொர்ணலிங்கம் (ரவி)தம்பதிகளுக்கு-மகாதேவா சுவாமிகள் இல்லச் சிறுவர்கள்-நிர்வாகத்தினர் மற்றும் வாழ்வகம் இல்லச்சிறுவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு-மேலும் செல்வன் யூலியனுக்கு தமது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றனர்.

அல்லையூர் இணையமும்-செல்வன் யூலியனுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ss (3) ss (6) ss (7) ss (8) ss (9) ss (10) ss (11) ss (4) ss (5) Scan10006 Scan10007 ss (12) ss (13) ss (14) ss (15) ss (16) ss (17) ss (18) ss (19) ss (20) ss (21) ss (22) ss (23) ss (24) ss (25) ss (26) ss (27) ss (28) ss (29) ss (30) SAM_8606-1024x768 DSC00972

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux