உலக சிறுவர் தினமான 01.010.2015 வியாழக்கிழமை அன்று-அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திலும் சிறுவர் தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன.
பராசக்தி வித்தியாலயத்தின் அதிபர் என்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற-இச்சிறுவர் தின நிகழ்வுகளில் மாணவர்களின் கலை நிகழ்சிகள் இடம் பெற்றதுடன் மேலும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலையில் கடந்த வருடம் புதிதாக அமைக்கப்பட்டிருந்த விஞ்ஞான ஆய்வுகூடத்தின் மேல்மாடி அமைக்கும் பணிகளும் தற்போது வேகமாக நடைபெற்று வருவதாகவும் அறியமுடிகின்றது.