மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகனின் புகழ் பாடி வெளியிடப்பட்ட “ஓங்கார நாதம்”  இறுவட்டு வெளியீட்டு விழாவின் வீடியோப்பதிவு!

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகனின் புகழ் பாடி வெளியிடப்பட்ட “ஓங்கார நாதம்” இறுவட்டு வெளியீட்டு விழாவின் வீடியோப்பதிவு!

12072645_1639610949642913_4348002329796103791_n

யாழ் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்கும் மண்டைதீவினில் திருவெண்காடு என்னும் குறிச்சியில் கோவில் கொண்டெழுந்து அருள் சுரக்கும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானின் புகழ் போற்றிப் பாடி வெளியிடப்பட்ட “ஓங்கார நாதம்” என்ற இறுவட்டு வெளியீட்டு விழா கடந்த 20/08/2015  அன்று சித்திவிநாயகப் பெருமானின் சந்நிதானத்தில் மிக எழிமையாக நடைபெற்றது.

திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானுக்கான  பாடல் வரிகளை,லண்டனில் வசிக்கும் வளர்ந்து வரும் இளம் கவிஞர்  நயினை அன்னைமகன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார்.இவருக்கு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தினால் “பாலகவிஞன்” என்ற பட்டமும்,பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டதுடன்-மேலும் கவிஞரின் பெற்றோர்களை ஆலயத்திற்கு அழைத்து வந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து அழகுசேர்த்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12074696_1638985783038763_1510712664918380941_nIMG_20150917_182153

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux