மண்டைதீவைச் சேர்ந்த,பிரபல வர்த்தகரும்,சமூக சேவையாளருமான,அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள் பற்றிய முக்கிய பதிவு!

மண்டைதீவைச் சேர்ந்த,பிரபல வர்த்தகரும்,சமூக சேவையாளருமான,அமரர் இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள் பற்றிய முக்கிய பதிவு!

12019755_869229246460190_2048132114331262705_n

தீவகம் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-கிளிநொச்சியை,வசிப்பிடமாகக் கொண்டவரும்-மூத்த சமூக சேவையாளரும், பிரபல வர்த்தகருமான இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள் கடந்த 18ம் திகதி  அமரத்துவம் அடைந்துள்ளார்.
அன்னாரது உயிர் மாரடைப்பு காரணமாக  பிரிந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஆரம்பகாலங்களில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இருந்து வந்து குடியேறிய திரு இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள்-கிளிநொச்சியில் தற்போது  கரைச்சி பிரதேசசபை அமைந்துள்ள பகுதியில் பொதுச்சந்தை இருந்தபோது வேல்முருகன் ஸ்ரோர்ஸ் என்ற பெயரில் வர்த்தக நிலையமொன்றை நிறுவி, சிறந்ததொரு வர்த்தகராக கிளிநொச்சி மக்களால் நன்கு அறியப்பட்டவர்.

கிளிநொச்சி வர்த்தக சங்க நிர்வாகத்தை தொடர்ந்து பத்து வருடங்கள் வரையில் சிறந்த  தலைவராக இருந்து சிறப்பாக நடத்தி வெற்றி கண்டவர்.

இக்கட்டான நீண்ட போர்க்காலத்தில் கிளிநொச்சி நகரின் மையத்தில் வாழ்ந்த அவர் பல இடப்பெயர்வுகள் சொத்தழிவுகள் என்பவற்றில் இருந்து மீண்டும் மீண்டும்முளைக்கும் மனிதராக உழைப்பால் உயர்ந்து வந்துள்ளார்.
கிளிநொச்சி நகரில் அரதந்துள்ள பிரசித்தி பெற்ற-கந்தசுவாமி ஆலய பரிபாலன சபையின் உபதலைவராகவும்- இறுதிவரை முருக பக்தராகவும்  இருந்து செயலாற்றியுள்ளார்.

தமிழ் தேசியப் பணியிலும் இறுதிவரை பற்றாளராக இருந்து தன் கடமைகளை இடைவிடாது ஆற்றியவராக அமரர் சரவணபவானந்தன் அவர்கள் இருந்துள்ளார்.

இவருக்குச் சொந்தமான பல ஏக்கர் கணக்கான நிலம்  இன்னும் இராணுவத்தால்  விடுவிக்கப்படாமல் பரவிப்பாஞ்சான் பகுதியில் உள்ளது.

கிளிநொச்சியில் சகலருடனும் நல்லுறவை பேணி வந்த அவரின் மறைவு காரணமாக கிளிநொச்சி வர்த்தகர்கள் சமூகப்பணியாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
அன்னாரின் பூதவுடல் கிளிநொச்சி உதயநகரில் உள்ள அவரது தற்காலிக முகவரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும்- மக்கள்  அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரர் சரவணபவானந்தன் அவர்கள்-பிள்ளைகளின் அழைப்பின் பேரில் கனடாவுக்குச் சென்று சில காலம் வாழ்ந்த போதிலும்-தான் உழைத்து வாழ்ந்த கிளிநொச்சி மண்ணைப்பிரிந்து வாழ மனமில்லாதவராக-மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பி சந்தோசமாக வாழ்ந்த பின்னேதான் -இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21.09.2015 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளன.

முழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

113667

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் அவர்கள் 18-09-2015 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி(வட்டக்கச்சி), கமலம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்செல்வி(முன்னாள் ஆசிரியை- பூந்தோட்டம் மகாவித்தியாலயம், வவுனியா, கனடா), சசிரேகா(முன்னாள் ஆசிரியை- கிளிநொச்சி கனிஸ்ட மகாவித்தியாலயம், கனடா), வர்த்தனி(ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயம், வவுனியா), கஜேந்தினி(மாவட்டச்செயலகம்- வவுனியா), சரவணபவாணி(Diet & Nutrions- அவுஸ்திரேலியா), ஸ்ரீகணேசவேல்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்தானலட்சுமி, வசந்தாதேவி, பொன்னம்பலநாதன்(துரை- முன்னாள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்), சந்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயறோகன்(கனடா), விஜயகுமார்(கனடா), அனுராஜ், சுரேந்திரன்(வைத்திய அதிகாரி- பொதுவைத்தியசாலை, வவுனியா), பிரகாஸ்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவலிங்கம், அரசகுலசிங்கம்(ஓய்வுநிலை கிராம அலுவலர்- வேலணை), பாக்கியரஞ்சினி, திருச்செல்வம், ரஞ்சினி, பத்மினி, காலஞ்சென்ற புவனேந்திரன், கெளரி, கோமளா, வாணி, ஞானன், சிவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாய்ஹரி(கனடா), சாய்கிறிஸ்(கனடா), ஜெசிக்கா(கனடா), யறோன்(கனடா), அனுசுருதி, சுகாஷ், சுரதா, சுவஸ்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 92, உதயநகர் மேற்கு கிளிநொச்சி எனும் முகவரியில்  நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு
றோகன் — கனடா
தொலைபேசி: +19055911158
விஜயகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16473501609
Dr.சுரேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771283059
பிரகாஸ் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +614260066577
கணேசவேல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +4479638858
பொன்னம்பலநாதன்(துரை) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775957284
உதயன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786756594

Sans titre

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux