தீவகம் வேலணைப் பிரதேசத்தில் இனங்காணப்பட்ட குருதிச் சோகையுடைய 1-5 வயதிற்குட்பட்ட 30 குழந்தைகளுக்கு இரும்புச் சத்து அதிகம் உள்ள ஊட்ட மருந்துகள் வழங்கப்பட்டன.
சங்கானை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் லயன் டாக்டர் க.ஜெயச்சந்திரமூர்த்தியின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு வேலணை பிராந்திய சுகாதார பணிமனையில் 9.9.2015 புதன்கிழமை அன்று இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தீவக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி லயன் டாக்டர் குகதாசன், மற்றும் சங்கானை லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஜெ.றஜீவன், நிகழ்ச்சி திட்டத் தலைவர் லயன் பெண்மணி மயூரிக்கா மேலும் மருத்துவர்கள் அ.ஜெயக்குமார், லயன் பெண்மணி மேரிமெற்லின் மற்றும் வேலணைப் பிரதேசத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு.கபிலன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டே இவ்மருத்துவ உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
படங்கள்-விபரங்கள்..முகநூல் நண்பர்-திரு Rajeevan Jeyachandramoorthy