நல்லூர் முருகனின் கைலாசவாகனத் திருவிழா 07.09.2015 திங்கட்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது. நல்லூரானின் கைலாசவாகனம் மிக்க அழகுடையது. 1950 ஆம் ஆண்டில் கீரிமலையைச் சேர்ந்த சிறாப்பர் சு.கனகசபை என்னும் பெயர் கொண்ட முருகபக்தரினால் நல்லூர் முருகனுக்கு மிகுந்த பொருட்செலவில் செய்து கொடுக்கப்பட்டதாம்.65 ஆண்டுகள் பழைமையான கைலாச வாகனத்தில் வேற்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
படங்கள்-திரு ஜங்கரன் சிவசாந்தன்