ஏ-9வீதியில் உள்ள கொக்காவில் பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம்புரண்டதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் 01.09.2015 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் கொக்காவில் ரவர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
யாழ் பிள்ளையார் கடை சோடா கம்பனிக்கு சொந்தமான பாரவூர்தியே தடம்புரண்டதாகவும்-இப்பாரவூர்தியைச் செலுத்திச் சென்ற சாரதியின் தூக்கக் கலக்கத்தினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்திற்காக-சம்பவ இடத்திலிருந்து படங்களை அனுப்பி வைத்தவர்.
அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்,பிரான்ஸில் வசிப்பவருமாகிய,திரு.அன்ரன்