நச்சுத் திராவகத்தை தவறுதலாக அருந்திய 3 வயதுக் குழந்தை மரணம்

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயதுக் குழந்தை போத்தலில் இருந்த நச்சுத் திராவகத்தைத் தவறுதலாகப் பருகியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. 

இச் சம்பவத்தில் சென்.ஜேம்ஸ் இளவாலையைச் சேர்ந்த ஆர்.ரெபேகா (வயது 3) என்னும் குழந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
 

குறித்த குழந்தையின் பெற்றோர் வழமையான வீட்டுவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அங்கிருந்த நச்சுத் திராவகத்தை எடுத்துக் குடித்து விட்டது. 

இதை அறிந்த பெற்றோர் குழந்தையை அவசர அவசரமாக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். எனினும் சிகிச்சை பயனின்றி இக் குழந்தை உயிரிழந்துவிட்டது. 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux