தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி கோவிலின் வருடாந்த அலங்காரத்திருவிழா 22.08.2015 சனிக்கிழமை முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதாக -ஆலய பரிபாலன சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாள் திருவிழா உபயகாரர் திரு ஈசன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட- 22.08.2015 சனிக்கிழமை அன்று நடைபெற்ற- அலங்காரத் திருவிழாவின்-பகல் மற்றும் இரவுக் காட்சிகளை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
நாட்டில் இடம்பெற்ற-யுத்த அனர்த்தங்களின் போது மண்கும்பானிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடந்து-இவ்வாலயம் பராமரிப்பார் இன்றி பாழடைந்து கிடந்ததாகவும்-யுத்த அமைதிக்குப் பின்னர் மீளக்குடியேறிய இப்பகுதி மக்களும்-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் முருக பக்தர்களும் இணைந்து-ஆலயத்தினை புனரமைத்து-மண்டலாபிஷேகத்துடன் சேர்த்து அலங்காரத் திருவிழாக்களையும் நடத்துவதற்கு முன்வந்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!