வன்னி யுத்த அனர்த்தங்களுக்கிடையில்-தமது தந்தையை,எறிகணைக்குப் பலி கொடுத்துவிட்டு-நிர்கதியாய் நிற்கும் தனது பிள்ளைகளின் கல்விக்கு ஏதாவது உதவிபுரிய முடியுமா?என்ற உருக்கமான வேண்டுகோளினை -அல்லையூர் இணையத்தின் ஊடாக முன் வைத்திருந்தார்-கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் மிகவும் வறுமையில் வாடும் திருமதி மதனராசா சுதா அவர்கள்.
அவரின் வேண்டுகோளின் உண்மை நிலையினை-எமது அறப்பணியாளர் ஆசிரியர் திரு சுபேதர் அந்தோனி அவர்களின் மூலம் அறிந்து கொண்ட நாம்-அவரின் பிள்ளைகளின் படிப்புக்கு முதலில் உதவிட விரும்பி-3 பிள்ளைகளின் ஒரு வருடப் படிப்புக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கியதுடன்-மேலும் ஒரு வருடத்திற்கு 3 மாணவர்களும் கதிர் தனியார் கல்வி நிலையத்தில் மாலை நேரக் கல்வி கற்பதற்கான கட்டணத்தையும் முழுமையாகச் செலுத்தியுள்ளோம்.
இம்மாணவர்கள் கல்வி கற்பதற்குத் தேவையான-இச்சிறு உதவியினை வழங்கியவர்கள்
மண்டைதீவைச் சேர்ந்த,திரு முகுந்தன் குலசிங்கநாதன் அவர்களும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சிவா செல்லையா ஆகிய இருவருமாகும்.இவர்களுக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் எழுதிய கடிதமும் கீழே உங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.