பழைய சைக்கிளில் மாத்தறையிலிருந்து 8 நாள்களில் யாழ்.வந்த

பழைய சைக்கிளில் மாத்தறையிலிருந்து

 8 நாள்களில் யாழ்.வந்த தெனியாய வாசி

 26 ரூபாவுடன்வந்து முக்கிய இடங்களைப் பார்வையிட்டார்

யாழ்ப்பாணம்,செப்.1
மாத்தறை  தெனியாய பிரதேச தன் பிற்ற கிராமத்தைச் சேர்ந்த மல்லவ ஆரச் சிகே ரத்னபால என்ற கிராம வாசி தனது பழைய சைக்கிளில் அங்கிருந்து பயணித்து எட்டுத் தினங்களில் யாழ்ப்பாணம் வந்த டைந்தார்.

யுத்தம் முடிவுற்றதையடுத்து பெரும் எண்ணிக்கையில் தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுப்பதைக் கேள்விப்பட்ட இவர் தமது சைக்கிளிலேயே யாழ்ப்பாணம் சென்றால் என்ன? என்ற எண் ணத்துடன் யாழ்.வரத் தயாரானார். சைக் கிளில் நெடுந்தூரம் தனி யாகப் பயணத்தை மேற் கொள்ள வேண்டாமென அவரது குடும்பத்தினர் அவருக்குத் தடைபோட் டனர். ஆனாலும் அவர் அதைப் பொருட்டா கவே எடுத்துக் கொள்ள வில்லை. தன்னம்பிக் கையுடன் தமது பய ணத்தை ஆரம் பித்தார். ஒரு வார்த்தைகூட தமி ழில்பேசத் தெரியாத, யாழ்ப்பாணம் செல்லும் பாதை கூட அறியாத அவர் தமது பயணத்தை ஆரம்பித்தபோது கை வசமிருந்த பணம் ஆக இருபத்தியாறு ரூபா மட்டும்தான்.
தைரியம், தன்னம்பிக்கையுடன் தெனி யாயவில் இருந்து புறப்பட்டு வவுனியாவை அடைந்து அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் வரையில் எந்தவொரு சிரமத்துக் கும் அவர்முகம் கொடுக்கவில்லை. யாழ்ப் பாணம் வந்த பின்னரே அவரது சைக்கி ளின்  நடு அச்சு உடைந்து போனது. எனி னும் இராணுவ முகாமொன்றின் சிப்பாய்க ளின் உதவியால் அது புதிதாக மாற்றப்பட் டது.
பகல் பொழுதுகளில் தமது பயணத்தை மேற்கொண்ட ரத்னபால இருள் சூழும் போது பொலிஸ் நிலையமொன்றிலோ அல்லது இராணுவ முகாமொன்றிலோ புக லிடம் கோரி அங்கு தங்கிக் கொண்டார். தங்குமிடமும் உணவும் கூட அவருக்கு அங்கு கிட்டியது.
யாழ்ப்பாணத்தில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் அனைத்துக்கும் அவர் செல்லத் தவறவில்லை. பொலிஸாரும், ராணு வத்தினரும் அவருக்கு உதவி ஒத்தாசை களை வழங்கியிருந்தனர். நயினாதீவுக்கும் அவர் சென்றிருந்தார். யாழ்.பொது நூலகம் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தது. தமிழ் மொழி தெரியாததால் தமிழ் மக்களுடன் தம்மால் உறவாட இயலவில்லையேயென அவர் பெரிதும் கவலைப்பட்டார். இருந்த போதிலும் அவர்கள் அன்புடன் தம்மை அர வணைத்து உணவு, பானங்கள் வழங்கி உபசரிப்புப் பண்புடன் நடந்து கொண்டதா கவும் அவர் தெரிவித்தார்.
ஆக 26 ரூபாவுடன் தனது வீட்டிலி ருந்து புறப்பட்ட ரத்னபாலாவுக்கு வழிப் பயணத்தின்போது உணவு, பானங்களுக் காக மூவாயிரத்து 900 ரூபா செலவழிந் தன. அவ்வளவும் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மூலமாகவும், வேறு அன்புள்ளங்களிடமிருந்தும் கிடைத்தன. யாழ்ப்பாணத்தைக் கண்டு களிப்புற்று தமது அபிலாஷையை நிறைவேற்றிக் கொண்ட அவர் கடந்த 29ஆம் திகதி தமது சொந்த ஊரான தெனியாய நோக்கிப் புறப் பட்டார். 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux