யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 05.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.வரும் 13.08.2015 வியாழக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று முருகப் பெருமான் வள்ளி-தேவயானையுடன் சாட்டி வெள்ளைக்கடற்கரைக்கு சென்று தீர்த்தமாடும் கண்கொள்ளாக்காட்சியும்-இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-வருடாந்த மகோற்சவத்தின் 8ம் நாள் (12.08.2015)சப்பறத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
நிழற்படப்பதிவுக்கான அனுசரணை வழங்கியவர்கள்….