இலங்கையின் வடக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க-நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வடக்கு வாசலில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற, ஒன்பது தளங்களைக் கொண்ட இராஜ கோபுரத்திற்கான கலசங்கள் வைக்கும் நிகழ்வு 09.08.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது.குடாநாட்டிலிருந்து பெருமளவான பக்தர்கள் கலசம் வைக்கும் நிகழ்வினைக் கான வருகை தந்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூர் முருகனின் வருடாந்த மஹோட்சபம் வரும் 19.08.2015 புதன்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.