அல்லையூர் இணையத்தின் சகோதர இணையமான-மண்டைதீவு( mandaitivu-ch.com)இணையத்தின் இயக்குநர் திரு சிவப்பிரகாசம் ஸ்ரீகுமாரன்(சிறி-சுவிஸ்)அவர்களின் அன்புச்சகோதரர் சிவப்பிரகாசம் சிவகுமார் அவர்கள் 03.08.2015 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்-என்ற செய்தியினை ஆழ்ந்த கவலையோடு அறியத்தருவதுடன்-அல்லையூர் இணையத்தின் சார்பில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-ஆண்டவனை வேண்டி நிற்பதோடு-அன்னாரின் இழப்பால் தவிக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் எமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06.08.2015 வியாழக்கிழமை அன்று காலை கனடாவில் நடைபெற்றது.
அல்லையூர் இணையத்திற்கு -அன்னாரின் உறவினர்களினால்,அனுப்பி வைக்கப்பட்ட-நிழற்படங்களின் சிலவற்றை- உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் சிவப்பிரகாசம் அவர்கள் 03-08-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம்(ஆசிரியர்) ஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம்(ஆசிரியர்), புவனேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜானகி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,றஜீதா(கனடா), அனோஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரகலா(கனடா), சிறிகுமாரன்(சுவிஸ்), ஜெயகௌரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமார், சசிக்குமார்(லண்டன்), தவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மகுலேந்திரன்(இலங்கை), சண்முகதாஸ்(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), கருணாகரன்(ரவி- கனடா), குகதாசன்(கனடா), பத்மா(சுவிஸ்), அருள், சிறிரவீந்திரராஜா(பிரான்ஸ்), துசியந்தி(லண்டன்), சுதாகர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற சகுந்தலாதேவி, அம்பிகா(இலங்கை), காலஞ்சென்ற மதுரரெத்தினம், மதிகலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலரும், சியானி, சுவேதா, மயூரன், பிரணவன், காயத்திரி, நிலுஜனா, கீர்த்திகா, விதுஜனா, கமலரூபன், சர்மிளா, சஜீதா, சசிரேகா, நிவேதிகா, கஜானன், அரங்கன், அட்சரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆதவன், அபினயா, ஷாமா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், தஷாயினி, யதுஷகா, தனுஷகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|