யாழ் தீவகத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமான எழுவைதீவில் அமைந்துள்ள முருகவேள் மகாவித்தியாலய மாணவர்கள் இருவருக்கு 30 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியில் இரண்டு துவிச்சக்கர வண்டிகள் ஊக்குவிப்புப் பரிசாக வழங்கப்பட்டன.
பரிசு பெற்ற மாணவர்கள் இருவரும்-வறுமையிலும் திறமையுடன்-கல்வி கற்று வருவதுடன் கடந்த2012 ஆம் ஆண்டு நடைபெற்ற-புலமை பரிசு பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் ஆவார்கள்.இவர்களின் திறமையினைக் கருத்தில் கொண்டு-மேலும் ஊக்கப்படுத்தும் முகமாக -இப்பாடசாலையில் கல்விபயிற்றுவிக்கும் ஆசிரியர் திரு அகிலன் நற்குணம் அவர்கள்-அல்லையூர் இணையத்திடம் விடுத்த வேண்டுகோளினை ஏற்று-அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு சிவா செல்லையா அவர்களினால் 30 ஆயிரம் ரூபாக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடசாலையின் நடைபெற்ற-வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் போதே இப்பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிகாம் லிங்கனும்,அப்துல் கலாமும் வறுமையிலும் திறமையாக கல்வி பயின்ற பிரபலமான மேதைகள் தான்….எனவே திறமைமிக்க மாணவர்களை ஊக்கப்படுத்துவது நமது கடமையாகும்.