மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த, அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் 04.08.2015 செவ்வாய்க்கிழமை அன்று நினைவுகூரப்படுகின்றது.
அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-அன்னாரது குடும்பத்தினரின் நிதியுதவியுடன்-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-யாழ் கரவெட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பரமானந்தா சிறுவர்-முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்-சிறுவர்களுக்கு-04.08.2015 செவ்வாய்க்கிழமை அன்று பகல் பிரார்த்தனை நிகழ்வுடன் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது.அன்னாரது உறவினர்கள் சிலர்-மண்கும்பானிலிருந்தும்-யாழ்ப்பாணத்திலிருந்தும் வருகை தந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!