யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியின் செய்தித் திரட்டு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியின் செய்தித் திரட்டு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

IMG_0009 copy (1)

செய்தி-01

யாழ் தீவகத்தில் அமைந்துள்ள வேலணை மத்திய கல்லூரியின் அலுவலக பயன் பாட்டுக்கென்று-கனடாவில் இயங்கிவரும்,வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கிளையினால்-192.000 ரூபாக்கள் பெறுமதியான  நிழற்பட பிரதியாக்கல் இயந்திரம் ஒன்று கல்லூரியின் அதிபரிடம் நேரடியாக  வழங்கப்பட்டுள்ளது.

செய்தி-02

இலங்கை கல்வித் திணைக்களகத்தின் நிதியுதவியுடன்-வேலணை மத்திய கல்லூரியில் அமைந்துள்ள,சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி  மண்டபம்  (பிரதான மண்டபம்)நவீன முறையில் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

செய்தி-03

வேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் நலனை முன்னிட்டும்-ஆசிரியர் பற்றாக்குறையினை,நிவர்த்தி செய்யும் பொருட்டும்-பிரான்ஸ் பழைய மாணவர் சங்கக் கிளையின் அனுசரணையில்-கணித பாட ஆசிரியர் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

(யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பை முடித்து வெளியேறிய,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,இளம் ஆசிரியர் ஒருவரே-அல்லையூர் இணையத்தின் சிபார்சின் மூலம் கல்விச்சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.)

செய்தி.04

வேலணை மத்திய கல்லூரியின் மைந்தனும்,வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும்-யாழ் கோண்டாவில் இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்தின் ஓய்வுநிலை அதிபருமாகிய,திரு சண்முகராசா வாமதேவன் அவர்கள்-வேலணை மத்திய கல்லூரி மாணவர்களின் நலன் கருதி வாரத்தில் மூன்று நாட்கள் இலவசமாக கணிதபாடத்தினை மாணவர்களுக்கு போதித்து வருகின்றார். ஆசிரியர் திரு வாமதேவன் அவர்களுக்கு- கல்லூரி நிர்வாகத்தின் சார்பிலும்-மாணவர்களின் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்கள்-நிழற்படங்கள்………….

எமது வேலணைச் செய்தியாளர்-திரு I.சிவநேசன்

IMG_0001 copy IMG_0002 copy IMG_0003 copy IMG_0004 copy IMG_0005 copy IMG_0006 copy IMG_0007 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux