தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-அன்னாரின் கணவர் திரு உமாபதிசிவம் அவர்களின் நிதி அனுசரணையில்-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-முதல் தடவையாக,கைதடி அரச முதியோர் இல்லத்தில் 13.07.2015 திங்கட்கிழமை அன்று சிறப்புணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அல்லையூர் இணையமானது கடந்த பல வருடங்களாக,வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இப்படியான பல உணவு வழங்கும் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்ற போதிலும்- கைதடி முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு ஒரு நாளாவது சிறப்புணவு வழங்க வேண்டும் என்ற எமது நீண்ட நாள் விருப்பத்தினை,அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் பூர்த்தி செய்து வைத்துள்ளதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
எமது நன்றிக்குரியவர்கள்…..
திரு உமாபதிசிவம்-பிரான்ஸ்
திரு ஸ்ரான்லி சுபதர் அந்தோனி
திரு I.சிவநேசன்
முக்கிய குறிப்பு
அல்லையூர் இணையத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட நிழற்படங்களின் பதிவுகளை ,மீள்பதிப்புச் செய்வதோ அல்லது பிரதி எடுப்பதோ முற்றாக தடுக்கப்பட்டுள்ளது.மீறி மீள்பதிவு செய்யப்பட்டால் -கைதடி அரச முதியோர் இல்ல நிர்வாகத்தினால் சட்ட நடைவடிக்கை எடுக்கப்படும்-என்பதனை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றோம்.