ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் 17.06.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று -30.06.2015 அன்று தேர்த்திருவிழாவும்-01.07.2015 புதன்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும்-02.07.2015 வியாழக்கிழமை இரவு தெப்போற்வத் திருவிழாவும் வெகு சிறப்பாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடந்தேறியது.
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பூங்காவன (தெப்போற்சவ) திருவிழாவின் போது அழகாக அலங்கரிக்கப்பட்ட தெப்பம் போன்ற அன்னத்தில் அமர்ந்திருந்து அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க புனித நயினைக் கடலினில் வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்த கண்கொள்ளாக் காட்சியும் இடம்பெற்றது.
யாழ் தீவகத்தில் கோவில் கொண்டு அருள்பாலித்து பக்தர்களைக் காத்தருளும்-நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் புகழ் பரப்பும் நோக்கோடு-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-பூங்காவன (தெப்போற்சவ) திருவிழாவின் முழுமையான சுருக்கமான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.
அன்னையின் பூங்காவன (தெப்போற்சவ) திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கியவர்…
பரிஸ் லாசப்பல் பகுதியில் அமைந்துள்ள-SKY Phone நிலையத்தின் உரிமையாளரும்-நயினாதீவைச் சேர்ந்த,காலஞ்சென்ற திரு,திருமதி சின்னராசா பொன்னம்மா தம்பதியினரின் புதல்வருமாகிய, திரு சின்னையா தனேஸ்வரன் அவர்கள் அனுசரணையினை வழங்கியுள்ளார்.அவருக்கும்-அவரது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் அருள் கிடைக்க வேண்டுகின்றோம்.