பரிஸ் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற-நயினை நாகபூசணி அம்மனின்  தேர்த்திருவிழா-நிழற்படங்கள் இணைப்பு!

பரிஸ் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற-நயினை நாகபூசணி அம்மனின் தேர்த்திருவிழா-நிழற்படங்கள் இணைப்பு!

DSC_0178

நயினாதீவில்……

உலகப் பிரசித்தி பெற்ற-நயினாதீவு  ஸ்ரீ நாகபூசணி  அம்மனின் வருடாந்த,பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் -அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ அபிராமி வீடியோ பதிவாளர்களினால் மிகத் தெளிவாக  பதிவு செய்யப்பட்டு-உலகமெல்லாம் பரந்து வாழும் நயினாதீவு  ஸ்ரீ நாகபூசணி  அம்மனின் பக்தர்களின் பார்வைக்கு வெளியிட்டிருந்தோம்.

நயினாதீவில் பல இணையங்கள் இருந்தும்–நயினாதீவு  ஸ்ரீ நாகபூசணி  அம்மனின் அருள்ஆசி பெற்ற இணையமாகவும்-அன்னையின் மகோற்சவத்தை முழுமையாகப் பதிவு செய்த இணையமாகவும்-அல்லையூர் இணையமே விளங்குவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

பரிஸில்….

நயினாதீவு  ஸ்ரீ நாகபூசணி  அம்மனின் வருடாந்த,தேர்த்திருவிழா-30.06.2015 செவ்வாய்க்கிழமை அன்று பரிஸ் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

பரிஸிலும்-பரிஸின் புறநகர்ப் பகுதியிலும் இருந்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.ஆலயத்திற்குள் நிறைந்திருந்த பக்தர்களின் மத்தியில் சிறிய தேரில் ஏறி உள் வீதியுலா வந்திருந்தாள் அன்னை நாகபூசணி-தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான திரு இந்திரன் அவர்களின் தலைமையில் பஜனைக் கச்சேரியும் இடம் பெற்றது.அதனைத் தொடர்ந்து பரிஸில் புகழ் பெற்ற-எம்.ஜி.ஆர் வீடியோ நிலையத்தினரால் தாகசாந்தியும் வழங்கப்பட்டது.அடுத்து நயினாதீவைச் சேர்ந்த,திரு பொன்னம்பலம் மற்றும் நண்பர்களினால் பக்தர்களுக்கு வயிறாற அன்னதானமும் வழங்கப்பட்டது.

கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட பரிஸ் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்குள்-அல்லையூர் இணையத்தினால் நிழற்படப்பதிவுகளை மேற்கொள்வதற்கு விஷேட அனுமதி வழங்கப்பட்டது.இம்முறை நயினாதீவிலும்-பரிஸ் முத்துமாரி அம்மன் ஆலயத்திலும்-நயினை  ஸ்ரீ நாகபூசணி  அம்மன்-அல்லையூர் இணையத்திற்கு அருளாசி வழங்கியதாகவே நாம் ஆனந்தமடைகின்றோம்.

11657521_817717635002321_499957752_n DSC_0167 DSC_0168 DSC_0169 DSC_0170 DSC_0171 DSC_0163 DSC_0159 DSC_0161 DSC_0173 DSC_0175 DSC_0179 DSC_0180 DSC_0184 DSC_0187 DSC_0188 DSC_0189 DSC_0194 DSC_0195 DSC_0199 DSC_0200 DSC_0187 DSC_0188 DSC_0194 DSC_0196 DSC_0200 DSC_0201 DSC_0204 DSC_0205 DSC_0207 DSC_0208 DSC_0210 DSC_0211 DSC_0212 DSC_0213 DSC_0216 DSC_0220 DSC_0225 DSC_0229 DSC_0232 DSC_0234 DSC_0155 DSC_0156 DSC_0157 DSC_0158 DSC_0237 DSC_0241 DSC_0243 DSC_0244 DSC_0248 DSC_0251 DSC_0252 DSC_0253 DSC_0255

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux