அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்களின் 48வது பிறந்த நாளினை முன்னிட்டு-02.07.2015 வியாழக்கிழமை அன்று யாழ் மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் -வறுமையிலும் திறமையுடன் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட-50 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.இப்பாடசாலையில் கல்வி போதிக்கும்-ஆசிரியர் திரு Subethar Anthony அவர்களின் வேண்டுகோளின் பேரில் -செல்லையா சிவா அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிதியின் அனுசரணையிலேயே இந்நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.
பாடசாலை அதிபர் கே.கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற-இந்நிகழ்வில்,இளைப்பாறிய அதிபர் ஏ.அம்பலவாணர் அவர்களும்-மீசாலை சோலை அம்மன் கோவில் குருக்கள் சண்முகம் அவர்களும்-சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள்-மாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்களின் 48வது பிறந்த நாளினை முன்னிட்டு-அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு-தற்காலிக ஆசிரியர் ஒருவரினை -அல்லையூர் இணையத்தின் ஊடாக ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் தீவகம் எழுவைதீவு முருவேள் வித்தியாலயத்தில்-திறமையுடன் வறுமையில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களுக்கு-30 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியில் இரண்டு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.
வறிய மாணவர்களுக்கு உதவிட அனைவரும் முன் வரவேண்டும் என்பதற்காகவே-இவற்றை உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்.