நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

10470869_886104614795589_6836420304144884505_n

ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க  நயினாதீவு  ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை ஸ்ரீ நாகபூ­ணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா 30.06.2015 செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு ஆரம்பமானது.

அதற்கு முன்னதாக அதிகாலை 4.30மணிக்கு விசேட பூசைகள் ஆரம்பமாகி காலை 7மணிக்கு வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று காலை 8மணிக்கு அம்பாள் தேருக்கு எழுந்தருளினார். தேரில் அர்ச்சனைகள் நிறைவடைந்ததும் தேருலாவில் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள்.   தேர் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள்  திங்கட்கிழமை மாலை முதல் ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர். 

நாகபூஷணி அம்மனின் அருளாசி பெற்று-அல்லையூர் இணையத்தினால்-முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட,தேர்த்திருவிழாவின்  வீடியோப் பதிவினை கீழே   உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

இத்தேர்த்திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கியவர்கள்…

பரிஸில் புகழ் பெற்ற-நம்மவரின் நாணய மாற்று நிறுவனத்தினர்-

அவர்களுக்கு நயினை  ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் அருள் என்றும் கிடைக்க வேண்டுகின்றோம்.

P1080492

ஏழாறுபிரியும் கடலோரம்
எழில் கொஞ்சி விளையாடும் கரையோரம்
இராஜகோபுரப்பதி கொண்ட நாயகியாள் உற்சவமாம்
கருநாகம் மீதிலமர்ந்து
கருணைக்கடலென வீற்றிருந்து
அருளும் அமுதும் மன நிறைவும் தரும்
எங்கள் நயினை நாகபூஷணிக்கு உற்சவமாம்
தேவரும் மூவரும் வாழ்த்த
விண்ணும் மண்ணும் போற்ற
கடலோடு காற்றெழுந்து மகிழ
எங்கள் நயினையின் நாயகியாளின்
உற்சவமாம்
அலையென அடியார் திரள
அனலையின் நாகமும் பூச்சூடி வாழ்த்த
ஆனந்தம் கொண்டே
அருள்மழை பொழியும் நாயகியாள் உற்சவமாம்….!!!!

“அம்மையே போற்றி அகிலமே போற்றி அகிலாண்டேஸ்வரியே போற்றி.”

அன்புடன்…
அன்னைமகன்.

11209537_886106411462076_3962102361450782778_n P108048111231145_886108084795242_1305074014142687153_n 11201935_886108788128505_1304992862389709754_n P108049311029486_886110478128336_6021672517464438112_n first-2-651x1024 11222117_886108698128514_8238511218625664124_n exchang11209686_886109481461769_6964288097812702088_n 11026083_886109578128426_2848065060438288113_n 11667487_886110071461710_3069376573644966053_n 11701151_886109524795098_6196797893557560822_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux