ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் 17.06.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அம்பாளின் திருமஞ்சத் திருவிழா 26.06.2015 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
அன்னையின் 10 ம் நாள் திருமஞ்சத் திருவிழாவின் உபயகாரர்கள்…
திருமதி கோபாலபிள்ளை குடும்பத்தினர்-(பிள்ளைகள்-பேரப்பிள்ளைகள்-பூட்டப்பிள்ளைகள்)
(நயினாதீவு-பரிஸ் -பிரான்ஸ்)
அனுசரணை….
பரிஸில் தமிழ் மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற…..
M.G.R VIDEO CLUB
5 Rue Perdonnet 75010 paris
Mètro .Gare du Nord/ La Chapelle
Tel; 01 46 07 62 73
ஏழாறுபிரியும் கடலோரம்
எழில் கொஞ்சி விளையாடும் கரையோரம்
இராஜகோபுரப்பதி கொண்ட நாயகியாள் உற்சவமாம்
கருநாகம் மீதிலமர்ந்து
கருணைக்கடலென வீற்றிருந்து
அருளும் அமுதும் மன நிறைவும் தரும்
எங்கள் நயினை நாகபூஷணிக்கு உற்சவமாம்
தேவரும் மூவரும் வாழ்த்த
விண்ணும் மண்ணும் போற்ற
கடலோடு காற்றெழுந்து மகிழ
எங்கள் நயினையின் நாயகியாளின்
உற்சவமாம்
அலையென அடியார் திரள
அனலையின் நாகமும் பூச்சூடி வாழ்த்த
ஆனந்தம் கொண்டே
அருள்மழை பொழியும் நாயகியாள் உற்சவமாம்….!!!!
“அம்மையே போற்றி அகிலமே போற்றி அகிலாண்டேஸ்வரியே போற்றி.”
அன்புடன்…
அன்னைமகன்.