யாழ் தீவகம் நயினாதீவின் மத்தியில்அமைந்துள்ள சனசமூக நிலையத்தினை தனது சொந்த நிதியில் ரூபாக்கள் 230000 செலவு செய்து மிக அழகாக புனரமைத்துக் கொடுத்துள்ளார்-நயினாதீவின் மைந்தனும் .சமய சமூக நற் சேவையாளரும் -சனசமூக நிலைய ஆரம்ப உறுப்பினரும்-விளையாட்டுக் குழு தலைவரும் -சிறந்த விளையாட்டுவீரரும்-தற்போதைய சனசமூகநிலைய போசகருமாகிய-மதிப்புக்குரிய திரு சின்னத்துரை ஜெகநாதன் அவர்கள்-இச்சனசமூக நிலையமானது கடந்த 25 வருடங்களாக புனரமைப்பு செய்யபடவில்லை என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
படிப்பதற்கு பத்திரிகைகளும் கொடுத்து-குடிப்பதற்கு நன்நீரும் வழங்கும் -நல் இதயங்கள் நிறைந்த புனித பூமி நயினாதீவு -தீவக கிராமங்கள் அனைத்துக்கும் முன்னுதாரணமாக விளங்குகின்றது.
நிழற்படங்கள்-தகவல்கள்……
நயினை எம்.குமரன்……..